புத்தளம் மாவட்டத்தில் காணப்படும் காட்டு யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்த அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (18) புத்தளம் மாவட்ட செயலகத்தில் சிறப்பு கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டத்தில் காட்டு யானைகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.