யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துக்கொண்டார்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது.
விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகா சமாதி தினமான இன்று மானிப்பாயில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அங்கிருந்து கலை, கலாசார பேரணியாக நிகழ்வு நடைபெற்ற மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரீபவானந்தராஜா, றஜீவன், மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், யாழ். மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.