இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக இராணுவத்தின் ஈடுபாடு மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளப்ந்தி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புர மற்றும் 22வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி ஜெனரல் லலித் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.