சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த மக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்!

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த மக்களின் உதவி வேண்டும் என்று பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுக்குளத்தின் கீழ் உள்ள பிரதான ஆறான நெத்திலி ஆறு பகுதியில் அண்மைக்காலமாக பெறுமதி மிக்க பல வகை மரங்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு வருகின்றது.

இரவு வேளைகளில் எந்தவித அனுமதியும் இன்றி மரங்கள் அழிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு வருவதுடன், அப்பகுதியில் உள்ள ஆற்றிலும் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகிறது.

அத்துடன், நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களிலும் பல அடிதாலத்திற்கு தோண்டப்பட்டு மணல் அகழ்வும் இடம் பெறுவதாக அப்பகுதியில் வாழும் விவசாயிகள் கிராம அலுவலருக்கு முறைப்பாட்டு செய்துள்ளனர்.

அதனையடுத்து தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திஸ்ஸாநாயக்க, கிராம அலுவலர், கிராம மட்ட அமைப்புக்கள், கண்டாவளை பிரதேச செயலாக அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் இணைந்து அப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக இன்று (22) நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதுபோன்ற செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது இருப்பதற்கு 0718592122 எனும் தனது பிரத்தியோக தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எந்த வேளையிலும் தம்மை தொடர்பு கொண்டு முறையிடுமாறு தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எந்தவித குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடன் தெரிவிப்பதன் மூலம் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும், இரவு வேளைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *