யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக திட்டம் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? – சஜித் கேள்வி

காட்டு யானை – மனித மோதலைக் குறைப்பதற்கான 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இன்று நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நமது நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்தில் எத்தனை மக்கள் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன? அந்தத் தரவுகளை இந்த சபையில் சமர்ப்பிக்க முடியுமா? 

காட்டு யானை – மனித மோதலைத் தீர்க்க 2020 இல் வகுக்கப்பட்ட தீர்வு யாது? இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

கடந்த 5 வருடங்களில் மனித-யானை மோதலால் எத்தனை மனித உயிர்கள் மற்றும் காட்டு யானைகள் பலியாகியுள்ளன. 

இதனால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு? 

காட்டு யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க காணப்படும் சட்டங்கள் யாவை? இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் யாவை? என கேள்வி எழுப்பியுள்ளார்.  

இதேவேளை பொதுவான குறைந்தபட்ச  சம்பள அதிகரிப்புடன் தோட்டத் தொழிலாளர்களுக்கான  சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில்  வலியுறுத்தியுள்ளார். 

தேசிய குறைந்தபட்ச மாத சம்பளத்தை  டிசெம்பரில்  21,000  ரூபாவிலிருந்து  27,000  ரூபாவாகவும் ஜனவரியில்  30,000 ரூபாவாகவும்  அதிகரிக்கும்  திட்டத்தை ஆதரித்த அதே வேளையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு  1,700 ரூபா  தினசரி  சம்பளம்  என்ற வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதற்காக அரசாங்கத்தை விமர்சித்தார்  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *