மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜூலை 22, 2025 அன்று இரவு, மாரவிலவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், அவரது குழந்தை காயமடைந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் 30 வயதுடையவர், காயமடைந்த குழந்தை அவரது 10 வயது மகன் ஆவார்.
அந்தப் பெண் முன்னர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, முச்சக்கர வண்டியில் வீடு திரும்பும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரிவால்வர் அல்லது பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.