எரிசக்தி அமைச்சரினால் மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம்  நாவற்காடு பகுதியில் சூரியசக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று மாலை (26) எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

10 மெகாவாட் மின் சக்தி, குறித்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தேசிய மின் கட்டமைப்புடன் நேற்று  முதல் இணைக்கப்பட்டதுடன், குறித்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் கட்டமைப்புக்களை அமைச்சர் உள்ளிட்டவர்கள்  பார்வையிட்டதுடன், குறித்த மின் உற்பத்தி நிலையத்தினால் வவுணதீவு பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள் போன்றவற்றிற்கு தேவைப்பாடாக காணப்பட்ட பல இலட்சம் பெறுமதிமிக்க பொருட்களும் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மேலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், மின்சார சபையின் உயரதிகாரிகள், மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபையின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *