விறகு எடுக்க காட்டுக்குச் சென்றவர் யானை தாக்கி பலி

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள கல்தீவு காட்டுப்பகுதியில்  யானை தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் விறகு எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றபோது யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

வெருகல் -சேனையூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 69 வயதுடைய கதிர்காமத்தம்பி கனகராசா  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் தஸ்னீம் பௌஸான் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://we.tl/t-NlEt4IJVe5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *