திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை சந்தியில் வைத்து இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து விநோத் எனும் 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அலஸ்தோட்டத்தில் நடைபெற்ற இசை நிகழ்வொன்றின்போது இருவருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே இவர்களுக்கிடையில் இருந்து வந்த தகராறு காரணமாக குறித்த இளைஞன் தாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.