90-களில் தமிழ் சினிமாவின் இளம்பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ‘சொக்லேட் போய்’ என அழைக்கப்பட்ட அப்பாஸ் 11 வருட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
கடைசியாக 2014ஆம் ஆண்டு வெளியான ‘ராமானுஜன்’ திரைப்படத்தில் நடித்திருந்த அப்பாஸ், தற்போது ஒரு புத்தம் புதிய நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறார்.
இத்திரைப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ‘லவ்வர்’ பட நாயகி ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்கு உதவியவரும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனருமான மரியா ராஜா இளஞ்செழியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.