பரந்தன்-முல்லைத்தீவு A35 வீதியில், கண்டாவளை வெளிக்கண்டல் சந்தியில் உள்ள பாலத்தில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் டிப்பர் வாகனம் சேதமடைந்துள்ளது.
இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட டிப்பர், பாலத்தை முடக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால், பாலத்தையும் சேதப்படுத்தி டிப்பர் வாகனமும் சேதமடைந்துள்ளது.
சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்