நடிகர் தனுஷுக்கும் நடிகை மிருணாள் தாகூருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த தனுஷ், சமீபத்தில் விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் பிரபல நடிகை மிருணாள் தாகூரை காதலித்து வருவதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதனையொட்டி படக்குழு சார்பில் மும்பையில் ‘மிட்நைட்’ பார்ட்டி அரங்கேறியது. இதில் நடிகை மிருணாள் தாகூர் கலந்து கொண்டார். அதுமட்டுமில்லாமல், மிருணாள் தாகூர் நடித்திருக்கும் சன் ஆப் சர்தார் 2 திரைப்படத்தின் விழா சமீபத்தில் நடைபெற்றது.அதில் தனுஷ் கலந்து கொண்ட வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அனைவரும் இவர்கள் காதலிப்பதாக பேசிக்கொண்டாலும், தனுஷ்-மிருணாள் தாகூர் தரப்பில் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம்பிடித்த மிருணாள் தாகூர், தொடர்ந்து Hi நானா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2, தி பேமிலி ஸ்டார் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.