தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்தார் Marc Márquez

22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. 12 கட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் 8 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையிலுள்ளார்.

பன்யாய்யா,அலெக்ஸ் மார்க்கஸ், ஸார்கோ மற்றும் பெஸ்ஸியாய்ச்சி ஆகியோர் ஒவ்வொரு வெற்றிகளை பதிவு செய்துள்ள நிலையில் 13வது கட்ட போட்டி ஆஸ்ரியாவின் ரெட்புல் ரிங் அரங்கில் நடைபெற்றது.

28 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப் போட்டியில் பெஸ்ஸியாச்சி முதலிடத்தில் போட்டியை தொடர்ந்தார். மார்க் மார்க்கஸ் இரண்டாமிடத்திலும் பன்னய்யா 3மிடத்திலும் போட்டியயை தொடர்ந்தனர். ஆரம்பமுதலே பன்னய்யா மற்றும் மார்க்கஸிற்கிடையில் பலத்த போட்டி நிலவியது.

பன்னய்யா 2மிடத்திற்கு முன்னேறி மார்க்கஸை பின்னுக்கு தள்ளினார். 27 சுற்றுக்கள் எஞ்சியிருந்த நிலையில் மார்க்கஸ் மீண்டும் இரண்டாமிடத்திற்கு முன்னேறியதோடு அலெக்ஸ் மார்க்கஸ் 4மிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

25 சுற்றுக்கள் எஞ்சியிருந்த நிலையில் அலெக்ஸ் மார்க்கஸ் 11மிடத்திற்கு பின்தள்ளப்பட்டார். ஓட்டுமொத்த சம்பியன்ஷிப் புள்ளிகளின் அடிப்படையில் மார்க் மார்க்கஸ் 413 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அலெக்ஸ் மார்க்கஸ் 275 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் காணப்படுகின்ற நிலையில் இப்போட்டி அனைவரும் முக்கியமானதொரு போட்டியாகவே பார்க்கப்பட்டது.

15வது சுற்றில் ஜோர்ஜ் மார்ட்டினின் வாகனம் விபத்துக்குள்ளானது. அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

18வது சுற்றில் வைத்து 3மிடத்திற்கான போட்டி சூடுபிடித்தது. 3பேர் குறித்த இடத்திற்காக சண்டையிட்டுக்கொண்டனர்.

19வது சுற்றில் வைத்து முதலிடத்தில் சென்றுக்கொண்டிருந்த பெஸ்ஸியாய்ச்சியை பின்னுக்கு தள்ளி மார்க் மார்க்கஸ் இப்போட்டியிலும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார். பெஸ்ஸியாய்ச்சி இரண்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டார். அதே 19வது சுற்றில் வைத்து மீண்டும் மார்க்கஸை பின்னுக்கு தள்ளி பெஸ்ஸியாய்ச்சி சிறப்பாக முதலிடத்திற்கு முன்னேறியதோடு இன்னும் வேகத்தை அதிகரித்து தனது வாகனத்தை செலுத்த தொடங்கினார்.

20 வது சுற்றில் மார்க்கஸ் முதலிடத்திற்கு முன்னேற மாறி மாறி இவர்கள் இருவரும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். 5 சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் மார்க் மார்க்கஸ் முதலிடத்தில் பேர்ட்டியை தொடர்ந்தார். அல்டேகார் மற்றும் பெஸ்ஸியாய்ச்சிற்கிடையில் இரண்டாமிடத்திற்கான போட்டி சூடுபிடித்தது. அல்டேகார் இரண்டாமிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

பின்னர் 28 சுற்றுக்களையும் 42 நிமிடங்கள் 11 செக்கன்களில் ஓடி முடித்து மீண்டும் மார்க்கஸ் மார்க்கஸ் முதலிடத்தை பிடித்து அசத்தினார். தொடர்ச்சியாக 6வது போட்டியில் மார்;க் மார்க்கஸ் முதலிடத்தை பிடித்து அசத்தியதோடு ஆஸ்திரியா அரங்கில் அவரது முதல் வெற்றியாகவும் இப்பருவகாலத்தின் 09வது வெற்றியாகவும் இது பதிவானது.

2014 ம் ஆண்டிலும் இதே போன்று தொடர்ச்சியாக 6 வெற்றிகளை மார்க்கஸ் பதிவு செய்திருந்த நிலையில் 11 வருடங்களின் பின்னர் அதே சாதனையை மீண்டும் நிலை நாட்டி அசத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *