
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புதிய நிறைவேற்று குழுவை தெரிவு செய்தவற்கான கூட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை வெள்ளவத்தை ஜும்ஆப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய குழு உறுப்பினர்கள் 106 பேர் கலந்துகொண்டு அடுத்துவரும் மூன்று வருடத்திற்கான புதிய நிறைவேற்றுக்குழுவை தெரிவு செய்யவுள்ளனர்.