செம்மணி புதைகுழிகளுக்கு நீதி வேண்டி, இன்று நான்காவது நாளாகவும் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.
செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு–கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகளுக்கு நீதி கிடைக்கவும்,
கடந்த கால இனப்படுகொலைக்கான நீதி கோரியும், தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து முன்னெடுத்த கையெழுத்துப் போராட்டம்
இன்று நான்காவது நாளாகவும் கிளிநொச்சி பூநகரி வாடியடியில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இணைந்து தங்களின் கையெழுத்துகளை பதிவு செய்தனர்.
இந்த நடவடிக்கைகள் சமத்துவக் கட்சியின் செயலாளர் நாயகம் மு. சந்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் வடக்கு–கிழக்கில் நீதி தேடும் மக்களின் குரலை சர்வதேச அரங்கில் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் காணப்படுகிறது..