இந்திய மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

இந்திய மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் நால்வருக்கும் மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களுக்கு ஏற்கனவே இரண்டு தடவைகள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அவர்களது வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மூன்றாவது தடவையாகவும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் எதிர்வரும் 11.09.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *