வட்டுவாகல் பாலத்தின் நிர்மானப்பணிக்காக அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை திரை நீக்கம் இன்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அனுரகுமார திசாநாக்க பங்குபற்றியிருந்தார். ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் பெயர்ப்பலகையின் திரையினை பாராளுமன்ற உறுப்பினர் திலகநாதன் அவர்கள் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் விமல் ரட்நாயக்க, அமைச்சர் சந்திரசேகரன்,பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன். பிரதி அமைச்சர் உபாலி,பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டவர்களும் மதகுருமார், அரச உயர்மட்ட அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.