
நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கும்போது சிரேஷ்டத்துவத்தின் பிரகாரமே இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அந்த முறைமை மாற்றப்பட்டு, புள்ளிகள் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் முறை பின்பற்றப்படுவதால், சிரேஷ்ட நீதிபதிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த விடயத்தில் நீதிபதிகளுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதா என தேடிப்பார்க்க தெரிவுக்குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

