தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம் வடக்கு கிழக்கின் பல பாகங்களின் இடம்பெற்றுவருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு, இன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன் ஆகுதியான நேரமான காலை 10.48 மணிக்குச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.




அத்தோடு தியாகி திலீபதிலீபனின் இறுதிநாள் நிகழ்வுகள் பருத்தித்துறை தியாக தீபன் திலீபன் நினைவாலயத்தில் காலை 8 மணிமுதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வடமராட்சி மக்களால் நினைவேந்தப்பட்டது.
மவீரர்களான புட்சித்தமிழ், அவர்களது பெற்றோர் பரஞ்ஜோதி தவமணி அவர்களால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தியாகி திலீபன் அவர்களது திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கலந்துகொண்டவர்களால் மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டது. அவர்களும்
இதில் பருத்தித்துறை மௌலவி, இந்து சமய குரு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தியாகி திலீபன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.






இதேவேளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இடம்பெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் நவநீதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில், புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தங்களது கடைகளை மூடி தீயாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.
பொதுச்சுடரினை சட்டத்தரணி தனஞ்சயன் ஏற்றிவைக்க அதனை தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரையுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்திருந்தது.







தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (26)திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலிலும் இடம்பெற்றது. இதனை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து ஏற்பாடு செய்தனர்.







