செம்மணி மனிதபுதைகுழி தொடர்பான அமைதி வழி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் கிளிநொச்சி மாவட்ட காரியாலயத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளை யாழ்.மாவட்டத்தின் பேருந்து நிலையத்தின் முன்பாக செம்மணி புதைகுழி அகழ்வு தொடர்பான அமைதி வழி போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு அனைத்து சமூக மட்ட அமைப்புகள், சர்வமத அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த அனைவரையும் எமது போராட்டத்தை பல சேர்க்கும் வகையில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.




