
கொழும்பிற்கும் ஜித்தாவிற்கும் இடையிலான சவூதி எயார்வின் நேரடி விமான சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது. கடந்த 30 வருடங்களாக செயற்பட்ட இந்த விமான சேவை, 2020ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் 19 பரவலை அடுத்து இடைநிறுத்தப்பட்டது.




