வவுனியாவில் உலக உளநல தின நிகழ்வு!

உலக உளநல தினத்தினை முன்னிட்டு வவுனியா உளநல சங்கத்தின் ஏற்பாட்டில் அபாயங்களிலும் அவசர நிலையிலும் -அனைவருக்கும் மனநல சேவைகள் எனும் தொனிப்பொருளில் விசேட நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாநகர சபை திறந்தவெளி அரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரோட் நிறுவன மாணவ, மாணவிகளினால் கலை நிகழ்வுகள் இடம்பெறறது.

மேலும் உலக உளநல தினத்தினை முன்னிட்டு பயனாளிகளின் பிள்ளைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட வினாடி வினா, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற 25 மாணவர்களிற்கு வெற்றி கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் செந்தூர்பதிராஜா, உள நல வைத்திய நிபுணர் மதுசி செனவிரத்ன,  வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல வைத்தியர் சி.சுதாகரன் மற்றும் வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், அரச திணைக்கள அலுவலகங்கள், வரோம் நிறுவன பங்குத்தந்தை, வரோட் நிறுவன உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *