வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
குறித்த சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன.
அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்து விசாரணைகளின் பின்னர் அவர்மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபரை எதிர்வரும்
14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.




