யாழ். பெண்ணின் பெயரில் செவ்வந்திக்கு பாஸ்போர்ட்! ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்லவிருந்த நிலையில் தட்டித் தூக்கிய பொலிஸ்!

நேபாளத்தில் பாதாள உலக சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதானார் என்பது தொடர்பான தகவலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 

அதன்படி இலங்கை பொலிஸ்பிரிவின் தலைமையில் நேபாள சட்ட அமுலாக்க மற்றும் இன்டர்போல் ஆதரவுடன் இணைந்து மூன்று நாள் சர்வதேச நடவடிக்கையின்  இஷாரா செவ்வந்தி கைதானார்  என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்லா சஞ்சீவா கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான செவ்வந்தி, காத்மாண்டு அருகே உள்ள பக்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி  பேலியகொட குற்றப் பிரிவின் சிறப்புக் குழு, நேபாளத்திற்குச் சென்றது. 

செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் சென்றதாக உளவுத்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து, செவ்வந்தி இருக்கும் இடத்தைக் கண்டறிய அதிகாரிகள் நேபாள  பொலிஸாருடன் இணைந்து பணியாற்றி வந்தனர்.

செவ்வந்தி இலங்கையில் இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு “ஜே.கே. பாய்” என்ற ஒரு கூட்டாளியின் உதவியுடன் சென்றார். இந்தியாவில் இருந்து, அவர் நேபாளத்திற்கு ரயிலில் பயணம் செய்தார். அங்கு அவர் ஒரு உயர் ரக வாடகை வீட்டில் போலி அடையாளத்துடன் வசித்து வந்தார்.

கெஹல்பத்தர பத்மே பாதாள உலக கும்பலின் கூட்டாளி ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பின்னரே செவ்வந்தியின் இருப்பிடத்தை வெளிப்படுத்தினார். 

இரகசிய தகவலின் பேரில், ஏஎஸ்பி ஒலுகலாவின் குழு  குறித்த பகுதியிலுள்ள வீட்டை சோதனை செய்ய நேபாள அதிகாரிகளுடன் சென்றபோது,  ​செவ்வந்தி எதிர்ப்பு இல்லாமல் சரணடைந்ததாகவும், “ஒரு நாள்” கைது செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கப்பட்டதாக அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் சோதனையின் போது ஜே.கே. பாய் உட்பட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளில், செவ்வந்தி தன்னைப் போன்ற யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்ததாக மேலும் தெரியவந்தது. 

சந்தேக நபர்கள் நேபாள அதிகாரிகளின் காவலில் உள்ளனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வர இலங்கை பொலிஸ் அதிகாரிகள் நேபாளத்திற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *