ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்த #GoHomeGota ஹாஷ்டாக், அதனை தகர்க்க #WeAreWithGota ஐ பகிரும் ஆதாராளர்கள் !

#GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையில் டுவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது.

இதனை அடுத்து #WeAreWithGota என்ற எதிர் டுவிட்டர் ஹாஷ்டாக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் பகிர்ந்துவருகின்றனர்.

நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பல அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளர்கள் இதனை பயன்படுத்தி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் #GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் தொடர்ந்தும் இலங்கையில் ட்ரெண்டிங்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *