“1977”க்கு உடனடியாக அறிவிக்கவும்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்..!

அரிசி மற்றும் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அரிசி மற்றும் சீனி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நேற்றிரவு முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கடைக்காரரோ அல்லது வர்த்தக நிறுவனங்களோ விற்பனையில் ஈடுபட்டால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்தவும்.

மேலும் நுகர்வோர் அதிகார சபை ஊடாக சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு , கட்டுப்பாட்டு விலையை மீறும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கெதிராக விதிக்கப்படும் தண்டப்பணமும் அதிகரிக்கப்படவுள்ளது இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *