யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
அதன்படி, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதான பெண் ஒருவரும், நீர்வேலியை சேர்ந்த 56 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், தெல்லிபழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 78 வயதான கீரிமலையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த 99 வயதான பெண் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் மந்திகை வைத்தியசாலையில் 77 வயதான பருத்தித்துறை யேர்ந்த ஆண் ஒருவருமாக மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, யாழில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.





