வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழாவில் இன்று தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் ஆலய சுற்றாடலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், உள் வீதியில் தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் பக்தர்கள் ஒன்றுகூடலாம் என்பதால் ஆலய சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நல்லுார் கந்தசுவாமி ஆலயத்திற்கு செல்லும் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்களை தாண்டி மக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.





