நாடளாவிய ரீதியில் சந்தையில் நிலவிய சீனி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கட்டுப்பாட்டு விலையில் சீனியினை விநியோகம் செய்யும் தேசிய வேலைத் திட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஊடாக சீனியை வழங்குவதற்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியின் வழிகாட்டலில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தலைமையில் மாவட்டம் முழுதும் இடம் பெற்றது.
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.அஹமட் ஹாதியின் மேற்பார்வையில் ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க தலைமைக் காரியாலயத்தில் 128 ரூபாவுக்கு சீனி வழங்கப்படுவதாக சங்க தலைவர் எம்.எம்.எம்.ஜெஸ்லினின் தெரிவித்தார்.






