தமிழ் இன நலன்களை அடகு வைக்குகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர்-ச.சுகாஸ்

தமிழ் இன நலன்களுக்கு முரணாக செயற்பட்டு தமிழ் இன நலன்களை அடகு வைக்குகின்ற தமிழ் தேசியக் கூட்டடைப்பின் துரோக செயற்பாடுகள் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் ஒரு அவசர அவசியமான ஊடக சந்திப்பில் பங்கேற்பது என்று சட்டத்திரணி சுகாஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழ் தேசிய அரசியல் தரப்பு சூடுபிடித்து குழம்பிய நிலையில் காணப்படுகின்றது.ஏனென்றால் தமிழ் இன நலன்களுக்கு முரணான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பாக தமிழரசுக்கட்சி ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு எழுதிய கடிதத்திலே அரசும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளும் செய்த யுத்த குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.உண்மையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த நடவடிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துகின்ற மீண்டும் காட்டிக்கொடுக்கின்ற ஒரு தொடர்ச்சியான செயற்பாட்டில் இவர்கள் ஈடுபட்டு வருவதை மீண்டும் ஒரு முறை படம் பிடித்து காட்டுகின்றது.

எந்தவொரு இனத்திலாவது தன்னுடைய இனத்திற்காக செயற்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிய சம்பவம் நடந்திருக்கிறதா?என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *