கிண்ணியா வட்டமடு பிரதேசத்தில் நாளை முதல் கொரோனா ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் என்னும் செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் உண்மை இல்லை என கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே. எம் .எம். நிஹார் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது கொரோனா வைரஸ் ஜனாஸாக்களை அடக்குவதற்காக உரிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன, இந்த நிலையில் ஜனாஸாக்களை அடக்குவதற்கு தேவையான எழுத்துமூல ஆவணங்களை சுகாதாரத்துறை மற்றும் இராணுவத் தரப்பில் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே சமூக ஊடகங்களில் தான் தெரிவித்ததாக சொல்லப்படும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், அடக்குவதற்கு உரிய அறிவித்தல் வரும் வரை காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.





