
2 லட்சம் ரூபா பணப்பரிசுடன் 73 ஆவது தேசிய உடற்கட்டமைப்பு சம்பியன்ஷிப்போட்டி நாளை மாலை 4.00 மணிக்கு வெலிசர நவலோக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த இரு வருடங்களின் பின்னர் இலங்கை உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி சம்மேளத்தினால் இந்தப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .
60,65,70,75,80,85 கிலோ கிராம் எடைப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன .
இந்தப் போட்டியில் பெண்களுக்கான போட்டி,இளையோருக்கான போட்டிகளும் உள்ளன.
இந்த போட்டியில் சுமார் 200 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என உடற்கட்டமைப்பு கூட்ட்டமைப்பு எதிர்பார்க்கிறது .