99 வயது வல்வை மூதாட்டி கொரோனோவால் உயிரிழப்பு

வல்வெட்டித்துறையில் 99 வயது மூதாட்டியொருவர் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் வல்வெட்டித்துறை சிவகுரு வீதி , மாதவடியை சேர்ந்த தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா (வயது 99) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அத்தோடு 1922ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி பிறந்த புஸ்பகாந்தியம்மாவிற்கு 12 பிள்ளைகளும் , 64 பேரப்பிள்ளைகளும் , 133 பூட்டப்பிள்ளைகளும் , 42 கொள்ளுபேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் அவர் தனது வீட்டில் நேற்று திடீரென நோய் வாய்வாய்ப்பட்ட நிலையில் மந்திகை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனை அடுத்து அவரது சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனோ வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *