தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்னம் இன்று ஞாயிற்றுகிழமை உயிரிழந்துள்ளார்.
கடுமையாக நோய்வாய்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





