வாரியபொல பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகள், பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொரோனா நோயாளிகளை வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.
வாரியபொல பிரதேசத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அபாயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால், அப்பகுதிக்கு செல்லும் சுகாதார அதிகாரிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.
மேலும் தெரியவருகையில்,
வாரியபொல பிரதேசத்தில், டிப்பர் வாகனம் மூலம் சுகாதார சேவை அதிகாரிகள் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வாரியபொல பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதாரத் துறை எவ்வாறு வேலை செய்யப் போகிறது? என்பது மிகவும் சவாலாக காணப்பட்டதோடு உணர்திறன் வாய்ந்த விடயம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
எனினும் அப்பகுதி மக்களை மீட்பதற்காக வெயில், மழையையும் பொருட்படுத்தாமல், கொரோனா தொற்றுடன் வீட்டில் இருக்கும் நோயாளிகளின் நிலையை பரிசோதிப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வருவதாக தெரிவித்தனர்.
அனைத்து சேவைகளுக்கும் ஒரே ஒரு பழைய ஆம்புலன்ஸ் மட்டுமே காணப்படுவதால், ஆலயம் ஒன்றுக்கு சொந்தமான டிப்பர் வாகனத்தில் போக்குவரத்துக்கு செய்வதாக சுகாதார மருத்துவ அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.






