வவுனியா பூந்தோட்டம் பகுதியில் கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்தனர்.
பூந்தோட்டம் சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவ்வீதிவழியாக வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த முச்சக்கரவண்டியில் கேரள கஞ்சா கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனை உடமையில் வைத்திருந்த நபரை கைதுசெய்த பொலிசார் அவர் பயணித்த முச்சக்கரவண்டியினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.





