பண்டிகைக் காலம்: வைத்திய நிபுணர் விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பு, மார்ச் 19

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் பொதுக் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் போது சுகாதார நடைமுறைகளை மீறினால் எந்த நேரத்திலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாட காத்திருக்கின்றனர்.

இருப்பினும், மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை புறக்கணித்து செயற்பட்டால், பண்டிகை காலத்திற்குப் பிறகு கொவிட் நிலைமை ஆபத்தானதாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அதற்கிணங்க, குறிப்பாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் அதில் பங்கேற்பவர்கள் கொவிட் தொற்று பரவும் வகையில் செயற்படாமல் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *