
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை ஆயிரத்து 345 ரூபாவிலிருந்து ஆயிரத்து 945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கு கடந்த 7ஆம் திகதி வழங்கிய அறிவித்தலின்படி இந்த விலையேற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 அமெரிக்க டொலரில் இருந்து 5.30 அமெரிக்க டொலராவும், டொலர் ஒன்றின் பெறுமதி அதிகரிப்பாலும் இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.