பிரபல பாடகரும், ஜிப்ஸி இசைக்குழுத் தலைவருமான சுனில் பெரேரா, தனது 68 ஆவது வயதில் காலமானார்.
மேலும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் சுனில் பெரேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
எனினும் இந் நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.





