புத்தளம்-நுரைச்சோலையிலுள்ள லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பாரிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
மேலும் இதன்படி லக்விஜய நிறுவன உயர் அதிகாரிக்கு, அங்குள்ள தீயணைப்பு படை அதிகாரி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அத்தோடு ,லக்விஜய நிறுவனத்தின் எல்லை அதிகமாகப்பட்ட காரணத்தால் இப்போது 2,000 லீற்றர் அளவில் மட்டுமே தீயணைப்பு நீர் சேமிக்க முடியுமாக உள்ளது. இன்னுமொரு வாகனமும் தேவை. திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பது சிரமமாக அமையலாமென அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
