2021ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ம் திகதி முதல் மார்ச் மாதம் 3ம் திகதி வரை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதேபோன்று, 2021ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஐந்தாம் தரத்திற்கான புலமை பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
எவ்வாறாயினும், கொவிட் பரவலுக்கு மத்தியில், பரீட்சை திகதிகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.