
அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வதற்காக அவசர காலநிலைமை நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
குறித்த அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை தொடர்பான விவாதம் காலை 10.30 மணியளவில் ஆரம்பமான அதேவேளை, பிரேரணை மீதான வாக்கெடுப்பு 4.30 மணிக்கும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வதற்காக அவசர காலநிலைமை நாடளாவிய ரீதியில் அச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இன்றையதினம் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டிருந்தவாய்மூல விடைக்கான வினாக்களுக்கு பிரிதொரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற தொடர்பாடல் அலுவலகம் அறிவித்துள்ளது.