
KARACHI, PAKISTAN – October 19 : A dead body is wrapped in plastic after being washed at the Edhi Morgue where many bodies were kept after a bomb blast killed atleast 150 during a failed assasination attempt on former Pakistani Prime Minister Benazir Bhutto’s parade October 19, 2007 in Karachi, Pakistan. Bhutto returned from self-imposed exile after eight years and was later killed during a campaign rally on December 28,2007..
யாழில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கணவனும் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, சாவகச்சேரி – நுணாவில் பகுதியை சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 87 வயதான மனைவி கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மின் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
அந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 97வயதுடைய அவரது கணவர் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.