
வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் 100 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்தது.
இந்த கொடுப்பனவு 24 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செயலணி கூறியுள்ளது.
எவ்வாறாயினும், வருமானத்தை இழந்தவர்கள் எவருக்கேனும் 2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காவிட்டால் முறையீடு செய்ய முடியும் என ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.
தமது முறையீட்டினை மாவட்ட அரசாங்க அதிபர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்குமாறும் செயலணி அறிவித்துள்ளது.