கொவிட் அச்சத்திற்கு மத்தியில் பாடசாலைகளுக்கு செல்லும் மில்லியன் கணக்கான மாணவர்கள்!

கொவிட் தொற்றுகள் அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு மத்தியில், மில்லியன் கணக்கான மாணவர்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முன் கால கொவிட் சோதனை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சமூக விலகல் மற்றும் முகக்கவசங்கள் பற்றிய விதிகள் நீக்கப்பட்டுவிட்டன.

இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாமல் பாடசாலையில் தொற்றுகள் விரைவாக உயரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் மற்றும் ஆரோக்கியமான 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கவில்லை.

அமைச்சர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புகிறார்கள். ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மாணவர்கள் மத்தியில் கொவிட் தொற்றுகள் 30 மடங்கு அதிகம்.

ஒகஸ்ட் 28ஆம் திகதி முதல் வாரத்தில், ஐந்து முதல் 15 வயதுடையவர்களில் 100,000க்கு 300க்கும் மேற்பட்ட கொவிட் தொற்றுகள் இருந்தன. இது 2020ஆம் ஆண்டு அதே வாரத்தில் 100,000க்கு 10க்கும் குறைவாக இருந்தது.

தலைமை ஆசிரியர்கள் மிகவும் மென்மையான காலத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பாடசாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *