ஹபரன காட்டு புதையல் வேட்டை: 7 பேர் கைது

ஹபரண வனப்பகுதியில் புதையல் தோண்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தலே விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அரசர் காலத்தில் காட்டில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் ரத்தினப் புதையல் இருப்பதாக தகவல் கிடைத்ததும், சந்தேக நபர்கள் புதையலைக் கொள்ளையடிப்பதற்காக ஒரு பெரிய குழியினை தோண்டியுள்ளனர்.

இதற்காக வனப்பாதுகாப்பு அதிகாரிகளின் உதவி பெறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த புதையலைப் பெறுவதற்கு முன்முயற்சி எடுத்த நபர் சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மைத்துனர் எனக்கூறி செயல்பட்டுள்ளார்.

இந்த நபர் மற்றவர்களிடம் தான் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மைத்துனர் என்றும் எந்த பயமும் இல்லாமல் செயற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எனினும், அந்த நபர் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வீரரின் நெருங்கிய உறவினர் அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *