மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையுடன்,ஆங்காங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
அதன்படி, கினிகத்தேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக காணப்படும் , பஸ் தரிப்பிடத்துக்கு செல்லும் வீதியின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு, வீதியும் தாழிறங்கியுள்ளது.
இதனால், குறித்த வீதியுடனான போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (6) பகல் தொடக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழஹகோன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, குறித்த கினிகத்தேனை நகர் ஊடாக நாவலப்பிட்டி மற்றும் கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் கொழும்பு வீதியின் கினித்தேனை பஸ் தரிப்பிடம் ஊடாக பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.