பிரபல பாடகர் சுனில் பெரேராவின் இறுதி சடங்குகள் இன்று திங்கட்கிழமை பிற்பகல் பொரெல்லா பொது மயானத்தில் நடைபெற்றன.
கொரோனா வழிகாட்டுதலின்படி இன்று மாலை 6.10 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றது.
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த கலைஞர்கள் பொரெல்லா பொது மயானத்திற்கு வெளியே தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.