திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகமம் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு தொடர்பான ஆலோசனை கூட்டம் தவிசாளர் ஏ.ஜி.சம்பிக பண்டார அவர்களது தலைமையில் நேற்று திங்கட்கிழமை (06) சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மேலும், இதில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.
இதேவேளை, இக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.