
பாடசாலைகளை திறக்க இனியும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை – பேராசிரியர் நீலிகா மலவிகே
பல மேற்கத்திய நாடுகள் நிலைமை வழமைக்கு திரும்பிய நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு இனிமேலும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
பல மேற்கத்திய நாடுகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும்இ பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு மே மாதத்திற்குள், இலங்கை உட்பட 23 நாடுகளில் மாத்திரமே பாடசாலை மூடியுள்ளதாகவும் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.இதேவேளை யுனிசெஃப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் இதனை தெரிவித்துள்ளதாகவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.